டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்து வரலாறு படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் இந்த சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியது. இதன்மூலம் டி20 தொடர் 1-1 என சமன் ஆகியுள்ளது.
வரலாறு படைத்த இங்கிலாந்து!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 304/2 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 60 பந்துகளில் 141* ரன்கள், ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் 83 ரன்கள், ஹாரி புரூக் 21 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 16.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணியில் அதிகபட்சமாக மார்கரம் 41 ரன்கள் எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்த்த டெவால்ட் பிரெவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் 3, சாம் கரன், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பில் சால்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
டெஸ்ட் விளையாடும் அணிகளில் அதிகபட்ச டி20 ரன்களை அடித்து இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் விளையாடாத காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்ததே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்காக இருக்கிறது.
சர்வதேச டி20யில் அதிக ரன்கள் குவித்த அணிகள்
1. ஜிம்பாப்வே - 344 ( காம்பியாவுக்கு எதிராக, 2024)
2. நேபாள் - 314 (மங்கோலியாவுக்கு எதிராக, 2023)
3. இங்கிலாந்து - 304 (தெ.ஆ.க்கு எதிராக, 2025)
4. இந்தியா - 297 (வங்கதேசத்துக்கு எதிராக, 2024)
5. ஜிம்பாப்வே - 286 (சீஷெல்ஸுக்கு எதிராக, 2024)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.