தோல்வி பயத்தைக் காட்டிய நேபாளம்; போராடி வென்றது இங்கிலாந்து!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வென்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வென்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; 185 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கோப் பெத்தேல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 26 ரன்களும் எடுத்தனர்.
நேபாளம் தரப்பில் தீபேந்திர சிங் அய்ரீ மற்றும் நந்தன் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷேர் மல்லா மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
போராடி வென்ற இங்கிலாந்து!
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நேபாளம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தீபேந்திர சிங் அய்ரீ அதிகபட்சமாக 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லோகேஷ் அதிரடியாக 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேபாளம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதிரடியாக விளையாடிய லோகேஷ் நேபாள அணிக்கு வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். இருப்பினும், அழுத்தமான சூழலிலும் கடைசி ஓவரை அற்புதமாக வீசிய சாம் கரண் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார்.
இங்கிலாந்து தரப்பில் லியம் டாஸன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லூக் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் மற்றும் சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
In the T20 World Cup match against Nepal, the England team secured a hard-fought victory.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.