FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2-வது ஒருநாள்: சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்; ஜிம்பாப்வேவுக்கு 357 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்துள்ளது.

18 செப்டம்பர் 2026, 6:05 pm IST
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டிராவிஸ் ஹெட் - படம் | AP
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.

டிராவிஸ் ஹெட் சதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 357 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 84 பந்துகளில்112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் அரைசதம் விளாசி அசத்தினார் அவர் 63 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், கூப்பர் கனோலி 69 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஜோஷ் இங்லிஷ் 21 ரன்கள், அலெக்ஸ் கேரி 20 ரன்கள், மாட் ரென்ஷா 15 ரன்கள் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆலிவர் பீக் 18 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டுகளையும், வெலிங்டன் மஸகட்சா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வெஸ்லி மத்வீர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the second ODI against Zimbabwe, the Australian team scored 356 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments