ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது.
சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவின. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றில் வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இரண்டு அணிகளும் களம் காண்கின்றன.
இதையும் படிக்க: கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்: தென்னாப்பிரிக்க கேப்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.