இந்திய அணி வீரர்கள் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதின. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 3-வது முறையாக பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து இந்திய ரசிகர்கள் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார். பாகிஸ்தான் அணியில் இளம் வீரர் சைம் ஆயுப் நன்றாக செயல்படுவார். ஆசிய கோப்பையை இந்திய அணி எளிதில் வெல்லும்.

அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார். அவர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறோம். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. இந்திய அணி ஆசிய கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுக்குள் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Many young fans have spoken out in support of India, saying that Pakistan cannot defeat India in the Asia Cup final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடூரமான போதை கலாசாரத்தின் மீது நடவடிக்கை: மாரி செல்வராஜ் கோரிக்கை!

பிக் பாஸ்: எட்டி உதைத்த கமருதீன்; நெஞ்சில் குத்திய பார்வதி!

காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு! பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்!

தெரு அரசியலில் ஈடுபட மாட்டேன்: மாரி செல்வராஜ்

SCROLL FOR NEXT