இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார்.
சர்வதேச லீக் டி20 தொடரின் 4-வது சீசன் வருகிற டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணையவுள்ளார்.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசல் மெண்டிஸுக்கு மாற்று வீரராக தினேஷ் கார்த்திக் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளார்.
ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியதாவது: டிபி வேர்ல்டு சர்வதேச லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணையவுள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஷார்ஜா வாரியர்ஸ் இளம் வீரர்கள் அடங்கிய அணி. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அணிக்கு அதிகமாக உள்ளது. அவர்களுடன் இணையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 686 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 412 டி20 போட்டிகளில் விளையாடி, 7437 ரன்கள் குவித்துள்ளார். அதில் 35 அரைசதங்கள் அடங்கும்.
இதையும் படிக்க: இந்திய ராணுவத்தால் பலியானோரின் குடும்பத்துக்கு பரிசுத் தொகையை வழங்கிய பாகிஸ்தான் அணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.