முகப்பு
கிரிக்கெட்

ஹெட்மேயர் அரைசதம் விளாசல்; ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 182 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:44 AM
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷிம்ரன் ஹெட்மேயர் - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 182 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் நாளான இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

ஷிம்ரன் ஹெட்மேயர் அதிரடி; 183 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பிரண்டன் கிங் 35 ரன்களும், கேப்டன் சாய் ஹோப் 19 ரன்களும் எடுத்தனர். அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மேயர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 26 ரன்களும், ரோவ்மன் பௌவல் 14 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து தரப்பில் பிராட் கர்ரி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாஃப்யான் ஷரிஃப், ஆலிவர் டேவிட்சன் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

summary

In the T20 World Cup match against Scotland, West Indies, batting first, scored 182 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.