முகப்பு
கிரிக்கெட்

பவர்பிளேவின் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய லாக்கி பெர்குசன்!

பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் குறித்து...

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:34 AM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் லாக்கி பெர்குசன். - படம்: ஏபி
பகிர்:

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய லாக்கி பெர்குசன் தொடக்க வீரர்கள் இருவரையும் வீழ்த்தினார்.

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் ஐந்து ஓவர்களில் 35 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்த ஆப்கன் அணிக்கு ஆறாவது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது.

லாக்கி பெர்குசன் வீசிய முதல் பந்திலேயே இப்ராஹிம் ஸத்ரான் ஆட்டமிழந்தார். அடுத்து கடைசி பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் போல்ட் ஆனார்.

பவர்பிளே முடிவில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 12 ஓவர்களில் 92/2 ரன்கள் எடுத்துள்ளது.

summary

Lockie Ferguson comes on and removes both openers in the same over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.