முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அதிரடி! இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு!

ஸ்காட்லாந்து - இத்தாலி இடையேயான ஆட்டத்தின் முதல் பாதி ஸ்கோர் பற்றி...

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 8:31 AM
ஜார்ஜ் முன்ஸே - PTI
பகிர்:

இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் இன்று விளையாடி வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்ஸே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஜோதி அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஹாரி மனென்டி பந்துவீச்சில் 84(54 பந்துகள்) ரன்களில் ஜார்ஜ் முன்ஸே ஆட்டமிழந்தார். தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸும் அவுட்டானார்.

பின்னர், அதிரடியாக விளையாடிய பிராண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஸ்காட்லாந்து 207 ரன்கள் குவித்தது. இத்தாலியின் கிராண்ட் ஸ்டீவர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

summary

Scotland's stunning performance! Italy given a target of 208 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.