FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டி20 உலகக் கோப்பை: இத்தாலியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

டி20 உலகக் கோப்பை தொடரில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

9 பிப்ரவரி 2026, 2:47 pm IST
ஸ்காட்லாந்து வீரர்கள்.
பகிர்:

டி20 உலகக் கோப்பை தொடரில் இத்தாலிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் இன்று விளையாடின. கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்ஸே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஜோதி அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஹாரி மனென்டி பந்துவீச்சில் 84(54 பந்துகள்) ரன்களில் ஜார்ஜ் முன்ஸே ஆட்டமிழந்தார். தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸும் அவுட்டானார்.

Advertisement

Advertisement

பின்னர், அதிரடியாக விளையாடிய பிராண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஸ்காட்லாந்து 207 ரன்கள் குவித்தது. இத்தாலியின் கிராண்ட் ஸ்டீவர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 208 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இத்தாலி அணி களமிறங்கியது.

ஆனால் ஸ்காட்லாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு காரணமாக இத்தாலி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இத்தாலி தரப்பில் பென் மானெண்டி 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரது சகோதரர் ஹாரி 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் லீஸ்க் 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

summary

George Munsey struck a half-century and shared a century opening stand with Michael Jones as Scotland defeated debutants Italy by 73 runs in a T20 World Cup match here on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments