முகப்பு
கிரிக்கெட்

இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா அதிரடி; நமீபியாவுக்கு 210 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 209 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 3:31 PM
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் ஹார்திக் பாண்டியா - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 209 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்தது.

இஷான் கிஷன், ஹார்திக் அதிரடி; 210 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா அரைசதம் விளாசி அசத்தினர். இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்களும் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர். திலக் வர்மா 25 ரன்கள், ஷிவம் துபே 23 ரன்கள், சஞ்சு சாம்சன் 22 ரன்கள் எடுத்தனர்.

இஷான் கிஷன்

நமீபியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பென் சிக்கோங்கோ, ஜேஜே ஸ்மித் மற்றும் பெர்னார்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி விளையாடி வருகிறது.

summary

India, playing their match against Namibia in the T20 World Cup, scored 209 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.