முகப்பு
கிரிக்கெட்

சச்சின் சாதனைக்கு மிக அருகில் ஜோ ரூட்!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை குறித்து...

Updated On : 4 ஜனவரி, 2026 at 8:36 AM
அரைசதம் அடித்த ஜோ ரூட்.
பகிர்:

சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த அரைசதத்துடன் ஜோ ரூட் சச்சின் சாதனைக்கு மிக அருகில் சென்றுள்ளார். அடுத்த போட்டியில் சமன்செய்ய வாய்ப்பு இருக்கிறது.

கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 211/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஜோ ரூட் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இது ஜோ ரூட்டின் 67-ஆவது அரைசதமாகும். சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 68

2. ஜோ ரூட் - 67

3. ஷிவ்நரைன் சந்திரபால் - 66

4. ராகுல் திராவிட்/ ஆலன் பார்டர் - 63

5. ரிக்கி பாண்டிங் - 62

summary

England's Joe Root gestures after scoring 50 runs during play on day one of the fifth and final Ashes cricket test between England and Australia in Sydney.

முழு கட்டுரையைப் படிக்க →