கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.
சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 384க்கு ஆல் அவுட்டாக, ஆஸி. 567க்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 342 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 161/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐந்தாவது டெஸ்ட்டை வென்றது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியுடன் கவாஜா ஓய்வு பெறுகிறார். கடைசி இன்னிங்ஸில் எட்ஜில் போல்ட் ஆன அவர் சிட்னி திடலுக்கு முத்தமிட்டு வெளியேறினார்.
இறுதியில், பார்வையாளர்கள் திடலுக்கு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.