இடிபிஎல் அணியின் உரிமையாளர்கள்.  படம்: எக்ஸ் / இடிபிஎல்
கிரிக்கெட்

ஐரோப்பாவில் அறிமுகமாகும் டி20 லீக்..! இணை நிறுவனராக அபிஷேக் பச்சன்!

ஐரோப்பாவில் அறிமுகமாகும் டி20 கிரிக்கெட் லீக் தொடர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஐரோப்பாவில் முதல்முறையாக ஐரோப்பியன் டி20 பிரீமியர் லீக் (இடிபிஎல்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி அனுமதியுடன் இந்த லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. நெதர்லாந்தின் கேன்சிபி, அயர்லாந்தின் சிஐ, ஸ்காட்லாந்தின் சிஎஸ் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்துகிறார்கள்.

கால்பந்துக்கு மட்டுமே பிரபலமாக இருக்கும் ஐரோப்பாவில் தற்போது கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகள் இந்தப் போட்டிகளை நடத்துகின்றன.

லெஜெண்டரி முன்னாள் ஹாக்கி வீரர் ஜேமி வியெர், முன்னாள் நியூசி வீரர் கைல் மில்ஸ், ஆஸி. பேட்டர் க்ளென் மேக்ஸ்வெல் இந்த அணிகளுக்கு உரிமையாளராக இருக்கிறார்கள்.

இந்தப் போட்டிகள் ஐபிஎல் போட்டிகளை பாதிக்காத வண்ணம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெற இருக்கின்றன.

மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் தற்போதைக்கு மூன்று அணிகளின் உரிமையாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிட்னியில் இந்தப் போட்டிகளின் அணிகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆம்ஸ்டர்டெம்: ஸ்டீவ் வாக், ஜேமி டையெர் & டிம் தாமஸ்.

எடின்பெர்க்: நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ்.

பெல்பெஸ்ட்: க்ளென் மேக்ஸ்வெல், ரோஹன் லுந்த்

Wednesday announced Australian cricket stars Steve Waugh and Glenn Maxwell along with hockey legend Jamie Dwyer as franchise owners of the tournament, which is scheduled to roll out later this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒட்டுமொத்த உலகில் ஒரேயொரு ஹார்திக் பாண்டியாதான்..! முன்னாள் வீரர் புகழாரம்!

உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்! மக்கள் போராட்டம்!

விஜய் தலைமையில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா தொடக்கம்!

பிபிஎல்: மீண்டும் மழை! 4 ரன்கள் வித்தியாசத்தில் மெல்பர்ன் அணி தோல்வி!

SCROLL FOR NEXT