இந்தியாவில் டி20 போட்டிகளை நடத்த மறுத்தால் வங்கதேசத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணங்களால், வங்கதேசம் அணி இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட மறுத்தது சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், தங்களது டி20 போட்டிகளை இலங்கையில் நடத்தவும் ஐசிசி-யிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
இந்த நிலையில், இந்தியாவில் டி20 போட்டிகளை நடத்த ஒப்புக்கொள்ளாவிட்டால், வங்கதேசத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐசிசி தலைவர் ஜெய் ஷா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விவாதிக்க துபையில் அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்ன பிரச்னை?
வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதான் எதிரொலியாக, வங்கதேச வீரர் முஷ்தஃபிகுர் ரஹ்மானை ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக்கொண்டதன் பேரில் கேகேஆர் அணி நீக்கியது.
இந்தக் காரணத்தினால், வங்கதேச அணியினர் இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கோரினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.