ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 26) அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் அனைத்தும் இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளன.
உலகக் கோப்பைத் தொடருக்கான அணிகளை கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துவிட்ட நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை சாய் ஹோப் கேப்டனாக வழிநடத்துகிறார். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்ற 11 வீரர்கள், எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்
சாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டி, ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பௌவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, குவெண்டின் சாம்ப்சன், ஜேடன் சீல்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு.
உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.