யு19 உலகக் கோப்பை: சூப்பர் சிக்ஸர் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெ ற்றி பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான் வீரர் அப்துல் சுமன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 110 ரன்களுக்கு 28.3 ஓவர்களில் ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 112/2 ரன்கள் எடுத்து 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் போன்ஸ் பாயின்டுகளுடன் 4 (+4. 324) புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சூப்பர் சிக்ஸ் புள்ளிப் பட்டியல்
குரூப் 1 (ஏ,டி)
ஆஸ்திரேலியா - 6 (+2.242)
ஆப்கானிஸ்தான் - 4 (+1.020)
இலங்கை - 4 (-0.180)
குரூப் 2 (பி,சி)
இங்கிலாந்து - 6 (+1.989)
பாகிஸ்தான் - 4 (+4. 324)
இந்தியா - 4 (+2.751)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.