கிரிக்கெட்

இஷான் சதம்; 5 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஷ்தீப்.. 4 -1 என தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று பிரமாண்ட சாதனை படைத்தது இந்திய அணியைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று பிரமாண்ட சாதனை படைத்தது இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (ஜன. 31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் (4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அடங்கும்.

இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் ஆட்டமிழந்ததையடுத்து, இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 43 பந்துகளில் 103 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

தனது பங்குக்கு அதிரடி காண்பித்த ஹார்திக் பாண்டியா அதிரடியாக 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களையும் விளாசினார். வியக்க வைக்கும் வகையில் இந்திய அணியினர் இந்தப் போட்டியில் 23 சிக்ஸர்களைப் பறக்க விட்டனர்.

பின்னர், 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்குகிய நியூசிலாந்து அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நியூசிலாந்து அணியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பின் ஆலன் 8 பௌண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களும், இஷ் சோதி 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 2 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்திய அணித் தரப்பில் அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம், இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி பிரமாண்ட சாதனை படைத்தது.

சதம் விளாசிய இஷன் கிசான் ஆட்ட நாயகன் விருதையும், இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக டி20 தொடரை வென்று பாகிஸ்தான் அபாரம்!

சென்னையில் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

SCROLL FOR NEXT