முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் ஹேசில்வுட் விளையாடுவாரா? பயிற்சியாளர் பதில்!

ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் முதல் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து...

Updated On : 28 மார்ச், 2026 at 7:34 AM
ஹேசில்வுட் - படம்: ஆர்சிபி
பகிர்:

ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (35 வயது) முதல் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்காத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹேசில்வுட் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சமீபத்தில் பெங்களூரு வந்தடைந்தார்.

கடந்த சீசனில் ஆர்சிபி கோப்பை வெல்ல மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் ஹேசில்வுட். அவரது துல்லியமான பந்துவீச்சினால் பல இக்காட்டான நேரங்களில் ஆர்சிபி அணி காப்பாற்றப்பட்டது.

முதல் போட்டியில் ஆர்சிபியும் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், ஹேசில்வுட் இல்லை என்றால் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் கூறியிருப்பதாவது:

ஹேசில்வுட் 26ஆம் தேதிதான் வந்தடைந்தார். அவரைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். விரைவில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார். இந்திய நாட்டைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷிக் தார் கடந்த சீசனை விட தற்போது நன்றாக பந்துவீசுகிறார். கூடுதலாக மங்கேஷ், அபிநந்தன் இருக்கிறார்கள் என்றார்.

summary

IPL 2026: When will Josh Hazlewood play? RCB coach Andy Flower gives update.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.