ஐபிஎல்

மும்பை, சென்னை போட்டியின் 3 முத்தான சாதனைகள்!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Raghavendran

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் முக்கியமான 3 சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

அதிக வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ்

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 100-ஆவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்தது. தனது 175-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற அணிகளில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது.

93 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-ஆவது இடத்திலும், 88 வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

விக்கெட்டுகளில் சதமடித்த டுவைன் பிராவோ

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டுவைன் பிராவோ இந்தப் போட்டியில் 100-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

4 ஆயிரம் ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டித் தொடரில் 4 ஆயிரம் ரன்களைக் குவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT