ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? மக்கள் கருத்து
ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியே வெற்றி பெறும் என்று தினமணி இணையதளம் சுட்டுரைப் பக்கத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியே வெற்றி பெறும் என்று தினமணி இணையதளம் சுட்டுரைப் பக்கத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டம் துபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இளம் வீரர்களைக் கொண்டுள்ள தில்லி கேபிடல்ஸ் முதன்முறையாக ஐபிஎல் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப்போவது மும்பை இந்தியன்ஸா தில்லி கேபிடல்ஸா என தினமணி சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 56.7 சதவிகிதத்தினர் தில்லி கேபிடல்ஸ் அணியே கோப்பை வெல்லும் என கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் கோப்பை வெல்லும் என 43.3 சதவிகிதத்தினர் கணித்துள்ளனர்.