முகப்பு
ஐபிஎல்

தில்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.

ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வீழ்ந்தது. கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ரிஷப் பந்தால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பந்த் 6 பவுண்டரிகளுடன் 58, ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. பெங்களூர் 6 5 1 10 +0.089
 2. சென்னை 5 4 1 8 +1.612
 3. தில்லி 6 4 2 8 +0.269
 4. மும்பை 5 2 3 4 -0.032
 5. கொல்கத்தா 6 2 4 4 -0.305
 6. பஞ்சாப்  6 2 4 4 -0.608
 7. ராஜஸ்தான்  5 2 3 4 -0.681
 8. ஹைதராபாத்  5 1 4 2 -0.180
முழு கட்டுரையைப் படிக்க →