ஐபிஎல்

ஐபிஎல் 2021: சிக்ஸர் போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் முன்னிலை

ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்சிஸ், மொயீன் அலி, ராயுடு என நால்வரும் குறைந்தது...

DIN

ஐபிஎல் 2021 போட்டியில் சிக்ஸர் அடிப்பதில் சிஎஸ்கே அணி வீரர்கள் முன்னணியில் உள்ளார்கள்.

ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன. 4-ம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற 4 அணிகள் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் சிக்ஸர் போட்டியில் சிஎஸ்கே அணி 96 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்சிஸ், மொயீன் அலி, ராயுடு என நால்வரும் குறைந்தது 15 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள். வேறு எந்த அணியிலும் இத்தனை வீரர்கள் குறைந்தது 15 சிக்ஸர்களை அடிக்கவில்லை. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்கள்

சென்னை - 96
ராஜஸ்தான் - 84
பஞ்சாப் - 83
கொல்கத்தா - 73
பெங்களூர் - 70
ஹைதராபாத் - 64
மும்பை - 63
தில்லி - 44

ஐபிஎல் 2021: சிஎஸ்கே வீரர்கள் அடித்த சிக்ஸர்கள்

ருதுராஜ் - 20 சிக்ஸர்கள்
டு பிளெஸ்சிஸ் - 18
மொயீன் அலி - 16
ராயுடு - 15
ஜடேஜா - 9
ரெய்னா - 9
பிராவோ - 4
சாம் கரண் - 3
தோனி - 2

ஐபிஎல் 2021: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கே.எல். ராகுல் - 22
ருதுராஜ் - 20
மேக்ஸ்வெல் - 19
மயங்க் அகர்வால் - 18
டு பிளெஸ்சிஸ் - 18
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT