ஐபிஎல்

சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்: சாம் கரண்

காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியுள்ள சாம் கரண்...

DIN

காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியுள்ள சாம் கரண், ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் இணையத்தளத்துக்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:

ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியது வேதனையளிக்கிறது. சென்னை அணியில் எனக்கு அற்புதமான தருணங்கள் அமைந்தன. வீரர்கள் அருமையாக விளையாடி வருகிறார்கள். அடுத்த சில நாள்களில் நான் எங்கிருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு எனது ஆதரவை அளிக்கப் போகிறேன். தொடர்ந்து நன்கு விளையாடி ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றும். எனக்கு ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் முன்பு நான் மீண்டும் விளையாடுவதற்கு நீண்ட நாள் ஆகாது. இன்னும் கூடுதல் பலத்துடன் அணிக்குத் திரும்புவேன் என்றார்.

ஐபிஎல் 2021 போட்டியில் சாம் கரண் 9 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT