சூர்யகுமார் யாதவ் 
ஐபிஎல்

சொதப்பும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்: பிரையன் லாரா சாடல்

ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான...

DIN

ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரையும் விமர்சனம் செய்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் ஐபிஎல் 2021 போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் 0, 8, 5, 3 ரன்கள் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். 11, 14, 9 என ரன்கள் எடுத்த இஷான் கிஷனை நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நீக்கியது மும்பை. இதையடுத்து இவ்விருவரையும் விமர்சனம் செய்து முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது:

இருவரும் மோசமாக விளையாடுவதற்கு இந்திய அணிக்குத் தேர்வானதும் ஒரு காரணமாக இருக்கலாம். பல வீரர்களும் தங்களுடைய பழைய பெருமையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்திய அணியோ அல்லது வேறு எதுவோ அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இதுதானே உங்களுக்கு வாழ்வாதாரம்? ஐபிஎல் போட்டியில் தான் உங்களை நிரூபித்தீர்கள். சூர்யகுமாரையும் இஷான் கிஷனையும் செளரப் திவாரியையும் பார்க்கும்போது செளரப் திவாரி தான் இருவரை விடவும் ரன்கள் எடுப்பதில் ஆர்வமாக உள்ளார். இருவரும் இன்னும் கொஞ்சம் தொழில்முறை வீரர்களாக நடந்துகொண்டு மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவ வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

SCROLL FOR NEXT