கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பேட் கம்மின்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று தான் அவருடைய முதல் ஆட்டம். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது.
ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார் பேட் கம்மின்ஸ். 2018-ல் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது கம்மின்ஸும் அதே பந்துகளில் அரைசதம் அடித்து மும்பை அணியை மிரள வைத்துள்ளார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட் கம்மின்ஸ் நிகழ்த்திய சாதனைகள்
* ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவருக்கு அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில் டேனியல் சாம்ஸும் இணைந்துள்ளார். காரணம் பேட் கம்மின்ஸ்.
37 ரன்கள் - பரமேஸ்வரன் (கொச்சி 2011)
37 ரன்கள் - ஹர்ஷல் படேல் (ஆர்சிபி, 2021)
35 ரன்கள் - டேனியல் சாம்ஸ் (மும்பை, 2022)
ஐபிஎல் போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார் பேட் கம்மின்ஸ்
vs மும்பை, 2020
vs சிஎஸ்கே, 2021
vs மும்பை, 2022
கம்மின்ஸ் இதற்கு முன்பு எந்த அணிகளுக்கு எதிராக அரை சதங்கள் அடித்தாரோ அந்த அணிகள் தான் அவ்வருடத்தின் ஐபிஎல் கோப்பையை வென்றன.
ஐபிஎல்-லில் 50+ ரன்கள் எடுத்ததில் அதிக ஸ்டிரைக் ரேட்
373.33 - பேட் கம்மின்ஸ் vs மும்பை, 2022
348.00 - சுரேஷ் ரெய்னா vs பஞ்சாப், 2014
327.27 - யூசுப் பதான் vs சன்ரைசர்ஸ், 2014
ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதங்கள்
பேட் கம்மின்ஸ் (கேகேஆர்) vs மும்பை, 2022 - 14 பந்துகள்
கே.எல். ராகுல் (பஞ்சாப்) vs தில்லி, 2018 - 14 பந்துகள்
யூசுப் பதான் (கொல்கத்தா) vs சன்ரைசர்ஸ் - 15 பந்துகள்
சுநீல் நரைன் (கொல்கத்தா) vs ஆர்சிபி - 15 பந்துகள்
ஐபிஎல் போட்டியில் 15 பந்துகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
56* - பேட் கம்மின்ஸ், 2022
42 - ரோஹித் சர்மா, 2015
39* - பென் கட்டிங், 2016
39 - யூசுப் பதான், 2008
36 - ஜெயசூர்யா, 2008
ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரில் 4 மற்றும் அதற்கு அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர்கள்
கெய்ல் - 7 முறை
கம்மின்ஸ் - 3 முறை
பாண்டியா - 2 முறை
11 வீரர்கள் - 1 முறை
ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரில் 30+ ரன்களை இருமுறை அடித்த வீரர்கள்
கெய்ல்
36 vs பரமேஸ்வரன் (4x6, 3x4)
30 vs ராகுல் சர்மா (5x6)
கம்மின்ஸ்
34 vs டேனியல் சாம்ஸ் (4x6, 2x4)
30 vs சாம் கரண் (4x6, 1x4)
ஐபிஎல்-லில் ஒரு ஓவரில் அதிக ரன்கள்
36 கெய்ல் vs கேடிகே, 2011
36 ஜடேஜா vs ஆர்சிபி, 2021
34 கம்மின்ஸ் vs மும்பை, 2022
32 ரெய்னா vs பஞ்சாப், 2014
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.