ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதற்காக பும்ரா, நிதிஷ் ராணா ஆகிய இருவர் மீதும் ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது. ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் (14) அரைசதம் அடித்த சாதனையைச் சமன் செய்துள்ளார் பேட் கம்மின்ஸ்.
இந்நிலையில் ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதற்காக பும்ரா, நிதிஷ் ராணா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதிஷ் ராணாவுக்கு ஊதியத்திலிருந்து 10% அபராதமும் பும்ராவுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விடுத்த அறிக்கையில் நடவடிக்கைக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.