முகப்பு
ஐபிஎல்

வார்னர், பிரித்வி அதிரடி: கொல்கத்தாவுக்கு 216 ரன்கள் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2022 at 5:35 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:26 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது ஆட்டம் மும்பை பிர்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர். முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடத் தொடங்கினர். இருவருமே அரை சதம் கடந்தனர். டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்களையும், பிரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கியவர்களில் ரிஷப் பந்த் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த அக்சார் பட்டேலும் (22), ஷர்துல் தாக்குரும்(29) ஆட்டமிழக்காமல் விளையாடினர். 

முடிவில் தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை எடுத்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.