மும்பையில் தில்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது ஒரு பெண்ணை மட்டும் கேமரா அடிக்கடி படம்பிடித்தது. அந்தப் பெண் கேகேஆர் அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். இவர் யார், இவரை ஏன் தொலைக்காட்சியில் அடிக்கடிக் காண்பிக்கிறார்கள் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். எல்லோரும் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது கேமராமேனின் கவனம் மட்டும் அந்தப் பெண்ணின் மீது இருந்ததாக மீம்களும் வெளியாகின.
ரசிகர்களைக் கவர்ந்த அந்தப் பெண் நடிகை ஆர்த்தி பேடி என்பது பிறகு தெரியவந்தது. ஆர்த்தி பேடி, ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
ஆர்த்தி பேடியை ஐபிஎல் ஆட்டத்தின் ஒளிபரப்பில் காண்பிக்கும் முன்பு இன்ஸ்டகிராமில் அவரை 29,000 பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்தார்கள். ஆனால் நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 57,000 என உயர்ந்துள்ளது.
தனக்குக் கிடைத்த திடீர் புகழால் உற்சாகமடைந்துள்ள ஆர்த்தி பேடி, ஐபிஎல் ஆட்டம் பற்றி இன்ஸ்டகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் மூன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.