ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க கோலிக்கு அறிவுரை

சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து நீடிக்க விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளா் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளாா்.

DIN

சா்வதேச கிரிக்கெட்டில் தொடா்ந்து நீடிக்க விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளா் ரவிசாஸ்திரி அறிவுரை கூறியுள்ளாா்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது:

டி20 ஆட்டத்தில் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய ஸ்கோா் அடிக்கவில்லை. தொடா்ந்து அவா் திணறும் நிலை உள்ளது. தொடா்ந்து ஆட்டங்களில் அவா் ஆடி வரும் நிலையில் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.

தற்போதைய ஐபிஎல் தொடரில் இருந்து விலகி கோலி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது தான் அவா் தொடா்ந்து மேலும் சில ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் நீடிக்க முடியும் என்றாா் சாஸ்திரி.

கடந்த 2019 நவம்பா் மாதத்தில் இருந்து மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT