ஐபிஎல்

சச்சின் டெண்டுல்கர் சாதனையைச் சமன் செய்த ருதுராஜ் கெயிக்வாட்

நேற்றைய ஆட்டத்தில் 6-வது ஓவரை வீசிய யான்செனின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ருதுராஜ்.

DIN

ஐபிஎல் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ருதுராஜ் கெயிக்வாட் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் 2021 இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் முதலிடம் பிடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. இந்த வருடம் ருதுராஜை ஏலத்துக்கு முன்பே ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த வருட ஜூலையில் தவன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ருதுராஜ், இரு ஆட்டங்களில் விளையாடினார். பிறகு கடந்த பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடினார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் ருதுராஜ் சுமாராகவே தொடங்கினார். எனினும் 9 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 237 ரன்கள் எடுத்துள்ளார். நேற்று, சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ருதுராஜ் கெயிக்வாட் சமன் செய்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 2010 ஐபிஎல் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தினார். 34 இன்னிங்ஸில் சுரேஷ் ரெய்னா 1000 ரன்களை எடுத்துள்ளார். படிக்கல் 35 இன்னிங்ஸில். 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 6-வது ஓவரை வீசிய யான்செனின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ருதுராஜ். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 1000 ரன்களைக் கடந்தார் ருதுராஜ். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் (31) 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சச்சினின் சாதனையை ருதுராஜ் சமன் செய்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்த வீரர் என்கிற பெருமையைக் கொண்டவர் - ஷான் மார்ஷ். 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார். சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸிலும் மேத்யூ ஹேடன் 25 இன்னிங்ஸிலும் எடுத்துள்ளார்கள். 


பெருமையைப் பெறுவார். இதுவரை விளையாடிய 28 ஐபிஎல் ஆட்டங்களில் 947 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Idli kadai public review - இட்லி கடை எப்படி இருக்கு? | Dhanush | Arun Vijay

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT