விராட் கோலி  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

விராட் கோலியின் ஃபீல்டிங் குறித்து மேக்ஸ்வெல் பகிர்ந்த நகைச்சுவை!

விராட் கோலி ஃபீல்டிங் செய்யும்போது நடந்துகொள்ளும் விதம் குறித்து அந்த அணியின் கிளன் மேக்ஸ்வெல் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

DIN

விராட் கோலி ஃபீல்டிங் செய்யும்போது நடந்துகொள்ளும் விதம் குறித்து அந்த அணியின் கிளன் மேக்ஸ்வெல் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

மைதானத்தில் விராட் கோலி ஃபீல்டிங் செய்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப் போல இருக்கிறார். அவர் ஃபீல்டிங் செய்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நம்முடைய வயதுடைய ஒருவர் இப்படி குழந்தை போல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நீங்கள் குழந்தை கிடையாது என்பதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது எனத் தோன்றும். நான் அப்படி கூறினால் அது நன்றாக இருக்காது. அவர் எப்போதும் உற்சாகமாக இருப்பார். அவர் மைதானத்தில் பெங்களூரு வீரர்களுடன் மிகுந்த உற்சாகமாக ஓடியாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT