ஜோஸ் பட்லர்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ராஜஸ்தான் ராயல்ஸுக்காக புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த அணியின் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த அணியின் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூவை வீழ்த்தியது.

அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ராஜஸ்தானின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நேற்றையப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை ஜோஸ் பட்லர் படைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்காக அதிகமுறை ஆட்டநாயன் விருதை வென்றவர்கள்

ஜோஸ் பட்லர் - 11 முறை

அஜிங்க்யா ரஹானே - 10 முறை

யூசுப் பதான் - 9 முறை

ஷேன் வாட்சன் - 9 முறை

சஞ்சு சாம்சன் - 8 முறை

நேற்றையப் போட்டி ஜோஸ் பட்லர் விளையாடிய 100-வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT