எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்
ஐபிஎல்

எம்.எஸ்.தோனியால் அதிர்ந்த சேப்பாக்கம்; காதுகளை மூடிக்கொண்ட ஆண்ட்ரே ரஸல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோனி களமிறங்கியதும் ரசிகர்கள் மைதானத்தை அதிரச் செய்தனர்.

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோனி களமிறங்கியதும் ரசிகர்கள் மைதானத்தை அதிரச் செய்தனர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 17-வது ஓவரின் 5-வது பந்தில் ஷிவம் துபே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். அவர் களமிறங்க வந்தபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது. ரசிகர்கள் ஆரவாரம் செய்த சத்தத்தை தாங்க முடியாமல் ஃபீல்டிங்கில் நின்றுகொண்டிருந்த ஆண்ட்ரே ரஸல் காதுகளை மூடிக் கொண்டார். அவர் காதுகளை மூடிக் கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT