ஐபிஎல்

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

ஹார்திக் பாண்டியா மிகவும் கடினமானவர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.

DIN

ஹார்திக் பாண்டியா மிகவும் கடினமானவர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலிலும் 9 -வது இடத்தில் உள்ளது.

கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதன்பின் ஹார்திக் பாண்டியாவின் மீதான விமர்சனங்கள் மீண்டும் எழ ஆரம்பித்தது.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா மிகவும் கடினமானவர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஹார்திக் பாண்டியாவை எனக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். ஹார்திக் பாண்டியாவை தெரிந்தவர்களுக்கு அவர் மிகவும் கடினமானவர் என்பது தெரியும். ஹார்திக் பாண்டியா வலிமையானவர் என எவ்வளவு கூறினாலும் தகும். அவர் உண்மையில் மிகவும் வலிமையானவர்தான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடனான நட்பிலிருந்து, அவர் மிக வலிமையானவர் என்பதை உறுதியாக கூற முடியும். அவர் உலகின் மிகவும் கடினமான மனிதர்களில் ஒருவர் என்றார்.

இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT