குல்பதின் நயீப்  படம் | தில்லி கேப்பிடல்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக தில்லி கேப்பிடல்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.

DIN

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக தில்லி கேப்பிடல்ஸ் மாற்று வீரரை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான குல்பதின் நயீப் மாற்று வீரராக தில்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ரூ.50 லட்சத்துக்கு தில்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குல்பதின் நயீப் ஆப்கானிஸ்தான் அணிக்காக 82 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் முதல் முறையாக விளையாடவுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT