முகப்பு
ஐபிஎல்

கேகேஆர் அணியுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

Updated On : 17 மார்ச் 2024, 6:07 pm IST
ஸ்ரேயாஸ் ஐயர் - படம் | கேகேஆர் (எக்ஸ்)
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ளது. அனைத்து அணியின் வீரர்களும் தங்களை ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஸ்ரேயாஸ் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், தசைப்பிடிப்பு காரணமாக மீதமுள்ள போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை. ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அவர் விளையாடினார்.

அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளபோதிலும், அவர் எந்த அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments