முகப்பு
ஐபிஎல்

புதிய அறிவிப்பை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 மார்ச், 2024 at 3:02 PM
மும்பை இந்தியன்ஸ் அணியினர் (கோப்புப்படம்)
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மும்பை அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னராக கேட்பரி டைரி மில்க் இணைந்துள்ளது. இது தொடர்பாக மும்பை அணியின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னராக கேட்பரி டைரி மில்க் இணைந்துள்ளதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்து வெற்றியின் அனுபவத்தை பெற தயாராகுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →