வனிந்து ஹசரங்கா 
ஐபிஎல்

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

DIN

ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வனிந்து ஹசரங்கா விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஹசரங்காவின் பெயரையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதன் காரணமாக ஹசரங்கா முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்கா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT