பயிற்சியில் எம்.எஸ்.தோனி படம்: சிஎஸ்கே/ எக்ஸ்
ஐபிஎல்

பயிற்சியில் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடித்த தோனி! (விடியோ)

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சியின்போது ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடித்த விடியோ வைரலாகிவருகிறது.

DIN

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சியின்போது ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடித்த விடியோ வைரலாகிவருகிறது.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.

மார்ச். 8ஆம் தேதி சென்னை வந்தடைந்த தோனியும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிவிட்டார். பல ஆண்டுகளாக விளையாடமல் இருந்த அவரது ஹெலிகாப்டர் ஷாட்டினை தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமென்பதால் வின்டேஜ் தோனியைப் போலவே தலைமுடியை வளர்த்து வருவதாக ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றையப் பயிற்சியில் தனது மிகவும் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டினை அடித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT