-
ஐபிஎல்

ஆர்சிபி அணியின் பெயர், சீருடை மாற்றம் ஏன்?

ஐபிஎல்-இல் பிரபல அணியாக இருக்கும் ஆர்சிபி அணி நிர்வாகம் தங்களது அணியின் பெயரை மாற்றியுள்ளது.

DIN

ஐபிஎல்-இல் பிரபல அணியாக இருக்கும் ஆர்சிபி அணி நிர்வாகம் தங்களது அணியின் பெயரை மாற்றியுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. விராட் கோலி இருப்பதால் ஆர்சிபி அணி மிகவும் பிரபலமான அணியாக இருக்கிறது. 2022 முதல் டு பிளெஸ்ஸி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கிறார்.

விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி 4 முறை பிளே ஆஃப்க்கு தகுது பெற்றுள்ளது. இருப்பினும் ஒருமுறைக் கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் அவர் மீது பல்வேறி விமர்சனங்கள் எழவே கேப்டன்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Bangalore என்பது Bengaluru ஆக மாற்றப்பட்டுள்ளது. 2014இல் கர்நாடகம் இந்தப் பெயரினை மாற்றியது. அப்போதிலிருந்தே ஆர்சிபியின் பெயரும் பெங்களூரு என மாற்றப்பட வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனையொட்டி நேற்றிரவு நடந்த 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சி பெயரினை மாற்றினார்கள். அத்துடன் புதிய சீருடையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

பெயர் மட்டுமல்லாமல், வழக்கமான ஆர்சிபியின் கறுப்பு-சிவப்பு சீருடை இல்லாமல் இந்தாண்டு சிவப்புடன் நீலம் கலந்த புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பச்சை நிற சீருடையையும் ஆர்சிபி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

அணியின் பெயர், சீருடை மாற்றினாலாவது கோப்பையை வெல்லுமா என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT