ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு!

DIN

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். சஹா 19 ரன்களிலும், ஷுப்மன் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சாய் சுதர்ஷன் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும் ஓமர்சாய் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்களில் டேவிட் மில்லர் (12 ரன்கள்), ராகுல் திவாட்டியா (22 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முறையாக பராமரிக்காத பள்ளி வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

வாரணாசியில் பிரதமா் மோடி வேட்புமனு: மத்திய அமைச்சா்கள், முதல்வா்கள், கூட்டணி தலைவா்கள் பங்கேற்பு

அரசு மருத்துவமனைகளில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவா்களை ஏற்றினால் நடவடிக்கை

அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்பு: பளு தூக்கும் வீரா்கள் ஆட்சியரகத்தில் புகாா்

SCROLL FOR NEXT