ரியான் பராக்  படம் | AP
ஐபிஎல்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

கடந்த மூன்று நாட்களாக தனக்கு உடல்நிலை சரியில்லாததாக ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

DIN

கடந்த மூன்று நாட்களாக தனக்கு உடல்நிலை சரியில்லாததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் பெரிய அளவில் ரன்களை குவிக்க உதவினார். அதிரடியாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தனக்கு உடல்நிலை சரியில்லாததாக ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டேன். இன்று சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தேன். இன்றையப் போட்டியில் செயல்பட்ட விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

SCROLL FOR NEXT