குஜராத் டைட்டன்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் தலா 29 ரன்கள் எடுத்தனர். க்ளாசன் (24 ரன்கள்), ஷபாஸ் அகமது (22 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (19 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்மதுல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது.