ரிக்கி பாண்டிங் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

சிஎஸ்கேவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம்: ரிக்கி பாண்டிங்

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தில்லி கேப்பிடல்ஸ் தோல்வியைத் தழுவியது. இன்று நடைபெறும் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தில்லி கேப்பிடல்ஸின் முதல் இரண்டு போட்டிகள் குறித்து ஆலோசித்தோம். இந்த இரண்டு போட்டிகளில் சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டோம். சில இடங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனால், ஆட்டத்தின் மொத்தமுள்ள 40 ஓவர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வழங்க வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT