ரிஷப் பந்த்
ரிஷப் பந்த் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ரிஷப் பந்த் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 192 ரன்கள் இலக்கு!

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இந்த இணை தில்லிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 93 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, பிரித்வி ஷாவுடன் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும், பிரித்வி ஷா 43 ரன்களில் (4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, மார்ஷ் (18 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (0 ரன்) எடுத்து அடுத்தடுத்து பதிரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே தரப்பில் பதிரானா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT