இந்த ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டியில் சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தாண்டு முதல் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை நடந்த 10 போட்டிகளில் 9 முறை டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இது குறித்து ருதுராஜ், “எனது டாஸ் சாதனையை பார்த்த எங்களது அணியின் பெரும்பாலான வீரர்கள், நான் டாஸில் தோற்பேன் என தெரிந்து முதலில் பேட்டிங் செய்ய தயாராகிவிட்டனர்”என சிரித்துக்கொண்டே பேசினார்.
ஏற்கனவே இது குறித்து டாஸ் பயிற்சியில் ஈடுபடுமாறு தோனி கூறியதாக கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.