படம் | ஐபிஎல்
படம் | ஐபிஎல்
ஐபிஎல்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். சஹா 1 ரன்னிலும், கில் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய, சாய் சுதர்ஷன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளேவில் குஜராத் அணி வெறும் 23 ரன்களே எடுத்தது.

இதனையடுத்து, ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சற்று அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், டேவிட் மில்லர் 30 ரன்களிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ராகுல் திவாட்டியா (35 ரன்கள்), ரஷித் கான் (18 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 19.3 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், யஷ் தயாள் மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். கேமரூன் கிரீன் மற்றும் கரண் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பேருந்து நிறுத்தங்களில் தங்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT