கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!
சிஎஸ்கே வீரர் பதிரானா தோனியை தனது தந்தை என்று புகழ்ந்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 21 வயதான வேகப் பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2022 முதல் விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணிக்கு சிறந்த பௌலராக இன்றளவும் இருக்கிறார். இதுவரை 20 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பிரபல இலங்கை வீரர் மலிங்கா மாதிரி பௌலிங் ஸ்டைல் இருப்பதால் இவரை ஆனைவரும் செல்லமாக பேபி மலிங்கா என்பர்.
Advertisement
Advertisement
நடப்பு ஐபிஎல் தொடரில் பதிரானா 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில் சிஎஸ்கே இணையதளத்தில் வெளியிட்ட விடியோவில் பதிரானா, “எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனது தந்தைக்குப் பிறகு அந்த பங்கினை ஆற்றுவராக தோனியே இருக்கிறார். அவர் எப்போதுமே என்னை கவனித்து கொள்கிறார்; நான் என்ன செய்ய வேண்டுமென போதியளவு அறிவுரைகளை வழங்குகிறார்.
தோனி ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய விசயங்களை சொல்லமாட்டார். சிறிய அறிவுரைகளை மட்டும் கூறுவார். அது என செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனது வீட்டில் அப்பா சொல்வதுபோலவே இது இருக்கும். அதுவே போதுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.