படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்கிற்கு தனது கையொப்பமிட்ட ஜெர்சியை மகேந்திர சிங் தோனி பரிசளித்துள்ளார்.

DIN

பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்கிற்கு தனது கையொப்பமிட்ட ஜெர்சியை மகேந்திர சிங் தோனி பரிசளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இந்த வெற்றியின்மூலம் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டிக்குப் பிறகு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை ஷஷாங் சிங்கிற்கு பரிசளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷஷாங் சிங், தோனியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளதாவது: நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை நினைத்து ஏமாற்றத்தில் இருந்தேன். ஆனால், எம்.எஸ்.தோனியின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளிக்கத் தவறியதே இல்லை. நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வலிமையாக திரும்ப வர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடியவா் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம்

கஞ்சா பயிரிட்டவா் கைது

SCROLL FOR NEXT